முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடுமலை அமராவதிநகர் வருகை


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  உடுமலை அமராவதிநகர் வருகை
x
திருப்பூர்


உடுமலையை அடுத்துள்ள அமராவதி நகர் சைனிக் பள்ளி வைர விழாவில் கலந்து கொள்வதற்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வர உள்ளதையொட்டி ஒவ்வொரு துறையும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அனைத்து அரசு துறை அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் ஆர்.டி.ஓ. தலைமையில் நடந்தது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை

உடுமலையை அடுத்துள்ள அமராவதி நகர் சைனிக் பள்ளியின் வைரவிழா வருகிற 15,16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் 16-ந்தேதி நடைபெற உள்ள விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

பொள்ளாச்சியில் 15-ந்தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அவர், அன்று இரவு உடுமலை வழியாக திருமூர்த்திமலைக்கு செல்கிறார். அங்குள்ள விருந்தினர் மாளிகையில் இரவு தங்கும் அவர் அடுத்தநாள் (16-ந்தேதி) காலை சைனிக் பள்ளியில் நடைபெற உள்ள வைரவிழாவில் கலந்து கொள்ள செல்கிறார்.

ஆலோசனை கூட்டம்

முதல்-அமைச்சர் கலந்து கொள்ளும் வைரவிழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினர் செய்துவரும் நிலையில், முதல்-அமைச்சர் உடுமலை வழியாக திருமூர்த்திமலை மற்றும் அமராவதி நகர் செல்லும் பகுதிகளில் அரசுதுறை அதிகாரிகள் என்னென்ன பணிகளை செய்யவேண்டும் என்பதற்கான முதல்கட்ட ஆலோசனை கூட்டம் உடுமலை எலையமுத்தூர் சாலையில் உள்ள ஆர்.டி.ஓ.அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தை ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த்கண்ணன் தலைமை தாங்கி நடத்தினார். கூட்டத்தில் உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்.தேன்மொழிவேல், சைனிக்பள்ளி முதல்வர் கேப்டன் நிர்மல்ரகு, நீர்வள ஆதார அமைப்பு (பொதுப்பணித்துறை), வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சார வாரியம், நகராட்சி, உணவு பாதுகாப்பு துறை, மருத்துவத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, போக்குவரத்துத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பணிகள்முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

உடுமலை அமராவதிநகர் வருகை

கூட்டத்தில் எந்தெந்த துறை அதிகாரிகள் அந்த துறைசார்ந்த என்னென்ன பணிகளை செய்யவேண்டும் என்று ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி பணிகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.


Next Story