பிரசன்ன விநாயகர் கோவிலில் சூரசம்ஹார விழா
உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் கந்தசஷ்டி, சூரசம்ஹாரம் விழாநிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கந்தசஷ்டி
உடுமலையில் பிரசித்தி பெற்ற பிரசன்ன விநாயகர் கோவில் வளாகத்தில் சுப்பிரமணியர் சன்னதி உள்ளது. இங்கு கந்தசஷ்டி, சூரசம்ஹாரத்திருவிழா கடந்த 25-ம்தேதி தொடங்கியது. விழாவையொட்டி தினசரி காலை 7 மணி முதல் 10 மணிவரை யாகசாலை வேள்வி பூஜை, அபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனை நிகழ்ச்சிகளும், மாலை 6.30 மணிமுதல் 7.30 மணிவரை உற்சவர்சுப்ரமணியசாமிக்கு அபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனை நிகழ்ச்சிகளும்நடந்தது. இதேபோன்று நேற்று காலை 8.30மணி முதல ்1 1மணிவரை நிகழ்ச்சிகள் நடந்தது.
சூரசம்ஹாரம்
நேற்று பிற்பகல்3.15 மணிக்கு வேல்வாங்கும் உற்சவம் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து சாமி புறப்பாடு, கந்தசஷ்டி சூரசம்ஹாரம் நடந்தது. சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் உடுமலை பொள்ளாச்சி சாலையில் உள்ள மாரியம்மன்கோவில் அருகில் கஜமுகா சூரன் தலையும், தளிசாலையில் குட்டைவிநாயகர் கோவில் அருகில் பானுகோபன் தலையும், தங்கம்மாள் ஓடை வீதியில் உள்ள தலைகொண்டம்மன் கோவில் முன்பு சிங்கமுகா சூரன் தலையும், கொல்லம்பட்டறை பகுதியில் பத்மாசூரன் தலையும் என 4 இடங்களில் சுப்பிமணிய சாமி, சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. ஒவ்வொரு இடத்திலும் நடந்த இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். மாலை6.30 மணிக்கு மகா அபிஷேகம், மகாதீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தது.
திருக்கல்யாணம்
இன்று (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு வள்ளிதெய்வானை உடனமர் சுப்பிரமணிய சாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. விழாவையொட்டி மதியம் 1 மணிக்கு கோவிலில் அன்னதானம் நடக்கிறது.
இரவு 7 மணிக்கு வெள்ளி ரதத்தில் சாமி திருவீதி உலா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ம.அம்சவேணி, தக்கார் சி.தீபா மற்றும் கோவில் அர்ச்சகர்கள், பணிய