உடுமலை வழியாக மின்சாரரெயில் சோதனை ஓட்டம்
பழனி-பொள்ளாச்சிக்கிடையே ரெயில் பாதையை மின்மயமாக்கும் பணிகள் நிறைவடைந்ததைத்தொடர்ந்து நேற்று உடுமலை வழியாக பழனி-கோவைக்கு இடையே பயணிகளுடன் மின்சார ரெயில் சோதனை ஓட்டம் நடந்தது.பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ரெயில் பாதை
கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு முதல் தமிழ்நாட்டில் உள்ள திண்டுக்கல் வரையிலான ரெயில் பாதை முன்பு மீட்டர் கேஜ் ரெயில் பாதையாக இருந்தது. அதன் பிறகு இந்த ரெயில் பாதை அகல ரெயில்பாதையாக மாற்றும் பணிகள் 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த ரெயில்பாதை அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டு, 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் செயல்பட்டுவருகிறது.
தற்போது உடுமலை வழியாக திருவனந்தபுரம்-மதுரைக்கிடையிலான அமிர்தா எக்ஸ்பிரஸ், பாலக்காடு-சென்னை இடையிலான எக்ஸ்பிரஸ், பாலக்காடு-திருச்செந்தூர் இடையிலான ரெயில், கோவை-மதுரை இடையிலான ரெயில் ஆகிய ரெயில்கள் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில்கள் மறுமார்க்கத்திலும் இயக்கப்படுகின்றன. அத்துடன் கோவையில் இருந்து உடுமலை, மதுரை, ராஜபாளையம், தென்காசி வழியாக திருநெல்வேலிக்கும், அங்கிருந்து மறுமார்க்கத்தில் கோவைக்கும் வாரத்திற்கு ஒருநாள் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது
மின்மயமாக்கல் பணிகள் நிறைவு
இந்த நிலையில் உடுமலை வழியாக பாலக்காடு-திண்டுக்கல் இடையிலான ரெயில் பாதையை மின்மயமாக்கும் பணிகள் நடந்து வந்தன. இதில் பழனி முதல் உடுமலை வழியாக பொள்ளாச்சி வரை உள்ள ரெயில் நிலையங்களுக்கிடையே 63 கி.மீ.தூரத்திற்கு ரெயில் பாதையை மின்மயமாக்கும் பணிகள் நிறைவடைந்தது.
இதைத்தொடர்ந்து இந்த பணிகள் நடைபெற்றுள்ளதை தென் சரக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார்ராய் (பெங்களூரு) கடந்த மார்ச் மாதம் 7-ம்தேதி ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து தொடர்பணிகள் நடைபெற்று, பணிகள் முழுமையடைந்தன. இதைத்தொடர்ந்து திண்டுக்கல்-பாலக்காடு இடையே அதிவேக ரெயில் சோதனை ஓட்டமும் ஏற்கனவே நடந்தது.
மின்சார ரெயில் சோதனை ஓட்டம்
இந்த நிலையில் ரெயில்பாதை மின் மயமாக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து நேற்று பயணிகள் ரெயில் சோதனை ஓட்டம் நடந்தது. மதுரை-கோவைக்கு இடையே தினசரி இயக்கப்படும் பயணிகள் ரெயில் நேற்று மதுரையில் இருந்து டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு காலை மணி 7.20-க்கு புறப்பட்டு பழனிக்கு காலை 10.15-மணிக்கு வந்து சேர்ந்தது. பழனியில் இந்த ரெயிலில் டீசல் என்ஜினுக்கு பதிலாக மின்சார என்ஜின் பொருத்தப்பட்டு அங்கிருந்து காலை10.35-க்கு புறப்பட்டு உடுமலைக்கு காலை 11.25 மணிக்குவந்து, இங்கிருந்து 11.27-க்கு புறப்பட்டு பொள்ளாச்சி வழியாக கோவைக்கு சென்றது.
பின்னர் இந்த ரெயில் கோவையில் இருந்து பிற்பகல் புறப்பட்டு உடுமலைக்கு 3.38-க்கு வந்து, இங்கிருந்து 3.40மணிக்கு புறப்பட்டு பழனிக்குசென்றது. இந்த மின்சார ரெயில்என்ஜின் சோதனை ஓட்டம் ரெயில்வே மின்சார என்ஜின் ஆய்வாளர் பொன்னுசாமி மேற்பார்வையில் நடந்தது.
இந்த ரெயில்பாதை மின் மயமாக்கப்பட்டுள்ளதால் நேற்று சோதனை ஓட்டமாக மின்சார என்ஜின் பொருத்தப்பட்ட பயணிகள் ரெயில் உடுமலை வழியாக பழனி-கோவைக்கு இடையே இயக்கப்பட்டது.
எதிர்பார்ப்பு
இதன் மூலம் இந்த வழித்தடத்தில் மின்சார ரெயில்கள் இயக்கம் விரைவில் தொடங்கும் என்றும், கூடுதல் ரெயில்கள் இயக்கப்பட வாய்ப்புகள் உள்ளது என்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மின்சார ரெயில்களை இயக்குவதற்கு 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பயன்படுத்தப்படும். அதனால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் ரெயில் பாதை பகுதிகளில் மின்சார கம்பிகளைத்தொடவோ, நெருங்கவோ வேண்டாம் என்ற எச்சரிக்கை விளம்பர பலகைகள் ஆங்காங்கு