எட்டயபுரத்தில் உமறுப்புலவர் பிறந்தநாள் விழா
எட்டயபுரத்தில் உமறுப்புலவர் பிறந்தநாள் விழா நடந்தது. இதில் கலெக்டர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்.
எட்டயபுரம்:
சீறாப்புராணம் இயற்றிய உமறுப்புலவரின் 380-வது பிறந்த நாள் விழா நேற்று நடந்தது. இதையொட்டி, எட்டயபுரத்தில் உள்ள உமறுப்புலவரின் மணிமண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கி.செந்தில்ராஜ், சட்டமன்ற உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன், உமறுப்புலவர் ஜமாத் தலைவர் காஜாமைதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து கலெக்டர் செந்தில்ராஜ் பேசுகையில், 'தூத்துக்குடி மாவட்டம் அதிக சுதந்திர போராட்ட வீரர்கள் கொண்ட மாவட்டம். எட்டயபுரம் அரசு மருத்துவமனையை 24 மணி நேரம் இயங்கக்கூடிய மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருகிறோம். மதுரையில் இருந்து தூத்துக்குடி வரை புறவழிச்சாலையில் எந்த ஒரு மருத்துவமனையும் இருப்பதாக தெரியவில்லை. எனவே எட்டயபுரம் மருத்துவமனையை வரும் காலங்களில் தரம் உயர்த்தப்படும்' என்றார். விழாவில் எட்டயபுரம் தாசில்தார் கிருஷ்ணகுமாரி, பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், செயல் அலுவலர் கணேசன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் நவநீதக்கண்ணன், பேரூராட்சி துணைத்தலைவர் கதிர்வேல், பேரூராட்சி உறுப்பினர்கள் மணிகண்டன், ஆண்டாள், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இமானுவேல், மகேந்திரன், சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.