கணவனின் கொடுமை தாங்க முடியாமல் தீக்குளிக்க முயன்ற பெண்
ஆரணி தாலுகா அலுவலகம் முன்பு கணவனின் கொடுமை தாங்க முடியாமல் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆரணி
ஆரணி தாலுகா அலுவலகம் முன்பு கணவனின் கொடுமை தாங்க முடியாமல் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
தீக்குளிக்க முயற்சி
சேத்துப்பட்டு தாலுகா தும்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி மீரா (வயது 35), இவர்களுக்கு மவுலீஸ்வரி (9) என்ற மகள் உள்ளார்.
எதிர் எதிர் வீட்டை சேர்ந்த ரமேசும், மீராவும் காதலித்து திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
ரமேஷ் தினமும் மீராவை தொந்தரவு செய்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மீரா கணவனின் கொடுமை தாங்க முடியாமல், அவரிடம் இருந்து எங்களை மீட்க வேண்டும் எனக்கூறி மகளுடன் ஆரணி தாலுகா அலுவலகம் முன்பு நேற்று மாலை தன் மீது மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
அப்போது அவர், நீதி வேண்டும். எனது கணவனிடம் இருந்து பிரிந்து வாழ நீதி வேண்டும் எனக் கூறினார்.
சமாதானம்
இதையறிந்ததும், தாசில்தார் ஆர்.ஜெகதீசன் மற்றும் அலுவலர்கள் உடனடியாக தண்ணீர் கேனுடன் வந்து அவர் மீது ஊற்றி மீட்டனர். பின்னர் அவருக்கு மாற்று உடைகளை வாங்கி தந்தனர்.
அதைத்தொடர்ந்து மீராவை தாசில்தார் மற்றும் அலுவலர்கள் சமாதானம் செய்தனர்.
மேலும் மீரா சேத்துப்பட்டு தாலுகா தும்பூர் பகுதிைய சேர்ந்தவர் என்பதால் போளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் அங்கு சென்று இதுசம்பந்தமாக மகளிர் போலீசார் உங்களை தொடர்ந்து விசாரணை நடத்தி நிரந்தர முடிவு எடுப்பார்கள் எனக்கூறி அனுப்பி வைத்தனர்.
இதனால் ஆரணி தாலுகா அலுவலகம் முன்பு பரபரப்பு காணப்பட்டது.