முன்னறிவிப்பின்றி ஏரி தண்ணீர் திறப்பு


முன்னறிவிப்பின்றி ஏரி தண்ணீர் திறப்பு
x

பாணாவரம் அருகே அதிகாரிகள் முன்னறிவிப்பின்றி ஏரியில் இருமந்து தண்ணீர் திறந்தனர். பொதுமக்கள் எதிர்ப்பை தொடர்ந்து உடனடியாக தண்ணீர் நிறுத்தப்பட்டது.

ராணிப்பேட்டை

தண்ணீர் திறப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் பகுதியில் அமைந்துள்ள ஏரி சுமாா் 25 ஏக்கா் பரப்பளவு கொண்டது. இந்த ஏரிக்கு முறையான நீா்வரத்து கால்வாய்கள்கள் இல்லததால் ஏரி நிரம்புவது மிக கடினம். இதனால் பல ஆண்டுளாக நிரம்பாமல் இருந்த ஏரி கடந்த இரண்டு ஆண்டாக பெய்த கனமழையால் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது. இதனால் இப்பகுதியில் உள்ள கிணறுகள், குட்டை, குளங்கள் நிரம்பி இப்பகுதிமக்களின் குடிநீர் ஆதாராமாக விளங்குகிறது.

இந்தநிலையில் சென்னை- பெங்களூரு விரைவு சாலைக்காக தேசிய நெடுஞ்சாலைத்துறை இப்பகுதியில் இருந்த விளை நிலங்களை கையகப்படுத்தி விரைவு சாலைபணிகளை செய்துவருகிறது. இந்தநிலையில் பாணாவரம் ஏரியில் இருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீரை திறந்துவிட வேண்டும் என ஒருவர் காவேரிப்பாக்கம் பொதுப்பணித்துறை அதிகாரி மெய்யழகனிடம் மனு அளித்ததாக கூறப்படுகிறது.இதனால் பொதுபனிதுறையினா் முன் அறிவிப்பு ஏதுமின்றி திடீரென ஏரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டுள்ளனா்.

பொதுமக்கள் எதிர்ப்பு

இது குறித்து அறிந்த இப்பகுதி மக்கள் உடனடியாக தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்த வேண்டும் என வருவாய்த்துறையிருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். அதன்பேரில் வருவாய்த்துறையினா் மற்றும் கிராமநிா்வாக அலுவலர் முளிமனோகர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுபணிதுறை இளநிலை பொறியாளா் மெய்யழகனிடம் திறக்கப்பட்ட தண்ணீரை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினா்.

அதைத்தொடர்ந்து மணல் மூட்டைகள் கொண்டு தண்ணீர் வெளியேறுவதை அதிகாரிகள் தடுத்துள்ளனா்.


Next Story