விக்கிரவாண்டிஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்
விக்கிரவாண்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
விழுப்புரம்
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டியில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை யொட்டி ஊஞ்சல் உற்சவம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி காலையில் அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கும், பெரியாயி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்து, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து இரவு 11 மணிக்கு அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் அங்காள பரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளினார். தொடர்ந்து, அம்மன் முன்னும் பின்னும் அசைந்தாடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விக்கிரவாண்டி பருவத ராஜகுலத்தார் மற்றும் கோவில் தர்மகர்த்தாக்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story