வீட்டு வசதி பிரிவின் கீழ் வீடு, மனைகள் வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு குலுக்கல் ஈரோட்டில் நாளை நடக்கிறது
வீட்டு வசதி பிரிவின் கீழ் வீடு, மனைகள்
ஈரோடு
ஈரோடு வீட்டு வசதி பிரிவின் கீழ் ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களில் கட்டப்பட்டு, அபிவிருத்தி செய்யப்பட்ட காலியாக உள்ள வீடுகள், மனைகள், அடுக்குமாடி குடியிருப்புகளை குலுக்கல் மூலம் ஒதுக்கீடு செய்ய கடந்த செப்டம்பர் மாதம் 5-ந்தேதி முதல் கடந்த மாதம் 6-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு நாளை (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு ஈரோடு சம்பத் நகரில் உள்ள கொங்கு மகாலில் குலுக்கல் நடைபெற உள்ளது. எனவே வீடுகள், மனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் வேண்டி விண்ணப்பித்தவர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story