வேலைவாய்ப்பற்றவர்கள் சுயதொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்


வேலைவாய்ப்பற்றவர்கள் சுயதொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்
x

வேலைவாய்ப்பற்றவர்கள் சுயதொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

வேலூர்

படித்த மற்றும் படிக்காத வேலைவாய்ப்பற்ற, சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருட்டு பாரத பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்க திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் உற்பத்தி பிரிவிற்கு ரூ.50 லட்சம், சேவை மற்றும் வியாபாரத்துக்கு ரூ.20 லட்சம் என்று கடன் உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உற்பத்தி பிரிவின் கீழ் ரூ.10 லட்சத்துக்கு மேற்பட்ட திட்டங்களுக்கும், சேவை பிரிவின் கீழ் ரூ.5 லட்சத்துக்கு மேற்பட்ட திட்டங்களுக்கும் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்கள் 10 சதவீதம் மற்றும் எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., பி.சி. மற்றும் சிறுபான்மையினர் பிரிவு விண்ணப்பதாரர்கள் 5 சதவீதம் சொந்த முதலீடு செய்ய வேண்டும்.

இந்த திட்டத்தில் கடன்பெறும் பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 25 சதவீதம் மற்றும் இதரபிரிவு விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 35 சதவீதம் மானியமாக வழங்கப்படும். இந்த திட்டத்தில் பயன்பெற https://www.kviconline.gov.in/ pmegpeportal/jsp/pmegponline.jsp என்ற இணையதள முகவரியில் ஆதார் அட்டை, திட்ட அறிக்கை, படிப்பு மற்றும் சாதி சான்றிழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல் தகவல்களுக்கு காட்பாடி காந்திநகரில் உள்ள மாவட்ட தொழில்மைய அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story