வெடிக்காத பட்டாசு ஏற்படுத்திய பரபரப்பு
திருச்செந்தூர் கடற்கரையில் வெடிக்காத பட்டாசால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதாரபதிக்கும் இடையே கடற்கரையில் நேற்று காலையில் நாட்டு வெடிகுண்டு போன்று மர்ம பொருள் ஒன்று கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் கோவில் புறக்காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வெடிகுண்டு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த மர்ம பொருளை கைப்பற்றி, திருச்செந்தூர் கோவில் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று சோதனை நடத்தினர். அதில் அது திருவிழா காலங்களில் வெடிக்கப்படும் பட்டாசு என்பது தெரியவந்தது. அந்த பட்டாசை பயன்படுத்தியபோது, அது வெடிக்காமல் கடற்கரை மணலில் விழுந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story