அடையாளம் தெரியாத ஆண் பிணம்
பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெரம்பலூர்
பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள காமராஜர் சிலை முன்பு நேற்று முன்தினம் காலை 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்?, அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து கிடந்த நபர் சிவப்பு நிற அரைக்கை சட்டையும், லுங்கியும் அணிந்திருந்தார்.
Related Tags :
Next Story