அடையாளம் தெரியாத முதியவர் பிணம்
அடையாளம் தெரியாத முதியவர் பிணம்
நாகப்பட்டினம்
திருமருகல் ஒன்றியம் ஆலத்தூர் ஊராட்சி அருள்மொழிதேவனில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் திட்டச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முதியவரை மீட்டு 108 ஆம்புலன்சில் நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story