லாரி டிரைவர்களுக்கு சீருடை


லாரி டிரைவர்களுக்கு சீருடை
x

மே தினத்தை முன்னிட்டு லாரி டிரைவர்களுக்கு சீருடையை அய்யப்பன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

கடலூர்

கடலூர்:

கடலூர் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மே தினத்தை முன்னிட்டு டிரைவர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட பொருளாளர் வி.எஸ்.எல். குணசேகரன், செயலாளர் மலைச் சிங்கம் காசிநாதன், பொருளாளர் கோபிநாதன், துணைத் தலைவர்கள் விஜயகுமார், உத்திரகுமரன், துணை செயலாளர்கள் கவாஸ்கர், சிவராமன், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அய்யப்பன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு 500 டிரைவர்களுக்கும், துப்புரவு பணியாளர்களுக்கும் சீருடை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில் கவுரவ தலைவர்கள் செந்தில் வேலன், முருகன், கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், சட்ட ஆலோசகர் சிவராஜ், மாநகராட்சி கவுன்சிலர் மகேஸ்வரி விஜயகுமார், ராமலிங்கம், தெய்வநாயகம், முருகன், பாஸ்கர், அஷ்ரப் அலி, சதிஷ், ஆனந்த், பாலசந்தர், செந்தில், மணிவண்ணன், சதாசிவம், சிவபாலன், சிலம்பு, அருணாசலம், ஆறுமுகம், சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story