தனியார் துப்புரவு தொழிலாளர்களுக்கு சீருடை


தனியார் துப்புரவு தொழிலாளர்களுக்கு சீருடை
x

ஆற்காட்டில் தனியார் துப்புரவு தொழிலாளர்களுக்கு சீருடை ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. சீருடை வழங்கினார்.

ராணிப்பேட்டை

ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக வாங்கப்பட்ட பாப் கட் ஜே.சி.பி. எந்திரம் மற்றும் தனியார் துப்புரவு தொழிலாளர்களுக்கு சீருடை வழங்குதல், தினசரி கூலி உயர்வு அறிவித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பவளக்கொடி சரவணன், நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார், பொறியாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆற்காடு தொகுதி ஜே. எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு புதிதாக வாங்கப்பட்ட ஜே.சி.பி. எந்திரத்தை தொடங்கி வைத்து, துப்புரவு தொழிலாளர்களுக்கு சீருடை வழங்கி தினசரி கூலி உயர்வை அறிவித்தார்.

இதில் முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் பொன்.ராஜசேகர், தி.மு.க. நகர செயலாளர் ஏ.வி.சரவணன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story