தட்டுப்பாடின்றி மும்முனை மின்சாரம் வினியோகிக்க வேண்டும்


தட்டுப்பாடின்றி மும்முனை மின்சாரம் வினியோகிக்க வேண்டும்
x

தட்டுப்பாடின்றி மும்முனை மின்சாரம் வினியோகிக்க வேண்டும் என்றுகுறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

வேலூர்

வேலூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நேற்று நடந்தது. உதவி கலெக்டர் கவிதா தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். அவர்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் புகார்கள் குறித்து தெரிவித்தனர். அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதவி கலெக்டர் தெரிவித்தார்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது.:-

வேலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு உர தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும். மேல்அரசம்பட்டு பகுதியில் உள்ள நீர் நிலைகளை தூய்மைப்படுத்த வேண்டும். தோட்டக்கலை துறை சார்பில் தக்காளி, கத்தரிக்காய், மிளகாய், சாமந்தி, மல்லி, சம்பங்கி உள்ளிட்ட பயிர் வகைகளை விளைவிக்க விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும்.

பள்ளிகள், ரேஷன் கடைகள், ஆஸ்பத்திரிகள் மற்றும் விவசாய நிலங்களில் மது குடித்துவிட்டு பாட்டிலை உடைத்து விட்டு செல்பவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.


Next Story