ஒன்றியகுழு தலைவர், தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 5 பேரும் சிறையில் அடைப்பு


ஒன்றியகுழு தலைவர், தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 5 பேரும் சிறையில் அடைப்பு
x

போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்ட ஒன்றியகுழு தலைவர், தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருச்சி

போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்ட ஒன்றியகுழு தலைவர், தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

வீடு மீது தாக்குதல்

திருச்சி எஸ்.பி.ஓ காலனி பகுதியில் தி.மு.க. எம்.பி.யான திருச்சி சிவா வீடு அமைந்துள்ளது. நேற்று முன்தினம் அரசு நிகழ்ச்சி ஒன்றில் திருச்சி சிவா எம்.பி.யின் பெயர் இடம்பெறவில்லை என்றும், அவரை புறக்கணிப்பதாகவும் கூறி அவருடைய ஆதரவாளர்கள் அந்தநிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் கே.என்.ேநருவுக்கு கருப்பு கொடி காட்டினர். இதனால் ஆத்திரம் அடைந்த தி.மு.க.வினர் அவருடைய வீடு மீது தாக்குதல் நடத்தி கார் கண்ணாடிகளை உடைத்தனர்.

இந்தநிலையில் கருப்பு கொடி காட்டியவர்களை செசன்சு கோா்ட்டு போலீசார் விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். இதுபற்றி அறிந்த தி.மு.க. கவுன்சிலர்கள் முத்துசெல்வம், காஜாமலை விஜய், ராமதாஸ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் துரைராஜ், திருப்பதி ஆகியோர் போலீஸ்நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்து கருப்பு கொடி காட்டியவர்களை தாக்கியதுடன், அவர்களை தடுக்க முயன்ற பெண் போலீஸ் சாந்தி, சிவா எம்.பி.யின் ஆதரவாளர் சண்முகம் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

மத்திய சிறையில் அடைப்பு

இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் கொடுத்த புகாரின் பேரில் தி.மு.க. கவுன்சிலர்கள் முத்துசெல்வம், காஜாமலை விஜய், ராமதாஸ் மற்றும் அந்தநல்லூர் ஒன்றிய குழுதலைவர் துரைராஜ், தி.மு.க. நிர்வாகி திருப்பதி ஆகியோர் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சேரன், அவர்கள் 5 பேரையும் கைது செய்தார். பின்னர் அவர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி அவர்களை வருகிற 29-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன் பேரில் அவர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story