ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்
ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.
விருதுநகர்
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்களுக்கான சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு யூனியன் தலைவர் பஞ்சவர்ணம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராமராஜ் பாண்டியன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் ரவி வரவேற்று பேசினார். கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) பிரின்ஸ், ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் நபர்களை விவசாய பணிக்கு ஏக்கர் ஒன்றுக்கு 10 நாள் வீதம் பயன்படுத்த வேண்டும். அவ்வாறு பயன்படுத்தினால் விவசாயம் செழிக்கும். விவசாயிகள் நலன் பெறுவார்கள் நாடும் வளம்பெறும். இதனை அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட 52 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story