கிரிப்டோ கோப்பை செஸ் தொடரில் உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தாவுக்கு மத்திய மந்திரி எல்.முருகன் வாழ்த்து
கிரிப்டோ கோப்பை செஸ் தொடரின் 7-வது சுற்றில் உலக சாம்பியன் கார்ல்சனை தமிழக வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தி இருந்தார்.
கிரிப்டோ கோப்பை செஸ் தொடரின் 7-வது சுற்றில் உலக சாம்பியன் கார்ல்சனை தமிழக வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தினார். கார்ல்சனுக்கு எதிரான பிரதான போட்டி 2-2 என டிரா ஆனநிலையில் டை பிரேக்கரில் கார்ல்சனை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாதனை நிகழ்த்தி உள்ளார். நடப்பாண்டில் 3-வது முறையாக உலக சாம்பியன் கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தாவுக்கு மத்திய மந்திரி எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,
ஐந்து முறை உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்து., வெற்றியை உரிதாக்கி நம் தேசத்திற்கு பெருமை சேர்த்த கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.இவரின் இத்தகைய சாதனைகள் வளர்ந்து வரும் இளம் தலைமுறைக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.