ஊராட்சி ஒன்றிய அலுவலக பெண் உதவியாளர் மீது தாக்குதல்
திருவோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலக பெண் உதவியாளர் மீது தாக்குதல் நடத்தியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.
ஒரத்தநாடு;
திருவோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலக பெண் உதவியாளர் மீது தாக்குதல் நடத்தியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.
அலுவலக உதவியாளர்
தஞ்சை மாவட்டம் திருவோணத்தை அடுத்துள்ள வெட்டுவாக்கோட்டை ராமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணுசாமி. இவருடைய மனைவி தமயந்தி(வயது42). இவர் திருவோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று அலுவலகத்தில் இருந்த தமயந்தியை வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவல் பணிக்காக அழைத்ததாக தெரிகிறது. அதன்படி சம்பந்தப்பட்ட அலுவலரின் அறைக்கு தமயந்தி சென்றார்.
தாக்குதல்
அப்போது அதே அறையில் இருந்த வெட்டுவாக்கோட்டை ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தஞ்சை மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க செயலாளருமான வாசு, நான் இங்கு இருக்கும்போது நீ ஏன் இங்கு வந்தாய்? என்று கேட்டு தமயந்தியை தகாத வார்த்தைகளால் திட்டி, அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தமயந்தி கொடுத்த புகாரின் பேரில் திருவோணம் போலீசார் வாசு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.