ஐக்கிய விவசாயிகள் சங்கத்தினர் டிராக்டர் பேரணி


ஐக்கிய விவசாயிகள் சங்கத்தினர் டிராக்டர் பேரணி
x
தினத்தந்தி 27 Jan 2023 12:15 AM IST (Updated: 27 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் ஐக்கிய விவசாயிகள் சங்கத்தினர் டிராக்டர் பேரணி நடந்தது.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரத்தில் நேற்று மாலை ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் சார்பில் டிராக்டர் பேரணி நடைபெற்றது. விழுப்புரம் நான்குமுனை சாலை சந்திப்பில் இருந்து தொடங்கிய இப்பேரணிக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகன், தலைவர் தாண்டவராயன், நிர்வாகிகள் இளங்கோவன், அல்லிமுத்து, அரிகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன், மணிகண்டன், மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகி ஏழுமலை மற்றும் திரளான விவசாயிகள் டிராக்டர் வாகனங்களுடன் கலந்துகொண்டனர்.

இவர்கள், டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தின்போது, மத்திய அரசு உறுதியளித்தபடி வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்தும், விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கு உத்தரவாதம், சுவாமிநாதன் குழு பரிந்துரைத்தபடி கொள்முதல் விலையை உத்தரவாதப்படுத்த வேண்டும், சிறு, குறு நடுத்தர விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக சென்றனர். இப்பேரணியானது கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நிறைவடைந்தது.


Next Story