ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலூர்

ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் கஜேந்திரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் நடராஜன், மேற்கு மாவட்ட செயலாளர் குமார், கிழக்கு மாவட்ட செயலாளர் சத்தியநாராயணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்ட தலைவர் திருகுமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில பொதுச்செயலாளர் குணசேகரன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை, சாதிய, இனவெறி படுகொலை, கலவரத்தை கண்டித்தும், இவற்றில் உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய மற்றும் மணிப்பூர் மாநில அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணைத்தலைவர் நம்பிராஜன் நன்றி கூறினார்.


Next Story