அ.தி.மு.க.வில் தற்போது ஒற்றுமை தேவை
அ.தி.மு.க.வில் தற்போது ஒற்றுமை தேவை என ரவீந்திரநாத் எம்.பி. தெரிவித்துள்ளார்
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டைநாதர் கோவிலில் ரவீந்திரநாத் எம். பி. நேரில் வந்து திருநிலைநாயகி, பிரம்மபுரீஸ்வரர், சட்டைநாதர், அஷ்டபைரவர், திருஞானசம்பந்தர் உள்ளிட்ட சன்னதியில் சிறப்பு வழிபாடு செய்தார். தொடர்ந்து தருமபுரம் ஆதீனத்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், அ.தி.மு.க.வில் உள்ள 1 ½ கோடி தொண்டர்கள் என்ன நினைக்கிறார்களோ அது விரைவில் நடக்கும். அ.தி.மு.க.வில் தற்பொழுது ஒற்றுமை தேவை. அப்போதுதான் தி.மு.க.வை எதிர்க்க முடியும். அ.தி.மு.க. கொடியை பயன்படுத்தக் கூடாது என எந்த நீதிபதியும் கூறவில்லை. நான் அ.தி.மு.க. தொண்டன.் அ.தி.மு.க. தொண்டன் யார் வேண்டுமானாலும் கொடியை பயன்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினாா். அப்போது ஓ.பன்னீர்செல்வம் அணி மாவட்ட செயலாளர் கஜேந்திரன், சீர்காழி நகர செயலாளர் மதன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.