அடையாளம் தெரியாத முதியவரின் உடலை அடக்கம் செய்த போலீசார்


அடையாளம் தெரியாத முதியவரின் உடலை அடக்கம் செய்த போலீசார்
x

உலகில் பிறந்த யாரும் அனாதை இல்லை என்பதை உணர்த்தும் வகையில் அடையாளம் தெரியாத முதியவரின் உடலை போலீசாரே அடக்கம் செய்த நெகிழ்ச்சி சம்பவம் அய்யம்பேட்டையில் நடந்தது.

தஞ்சாவூர்

அய்யம்பேட்டை;

உலகில் பிறந்த யாரும் அனாதை இல்லை என்பதை உணர்த்தும் வகையில் அடையாளம் தெரியாத முதியவரின் உடலை போலீசாரே அடக்கம் செய்த நெகிழ்ச்சி சம்பவம் அய்யம்பேட்டையில் நடந்தது.

முதியவர்

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே பசுபதிகோவில் கல்லறை எதிரே 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் போலீசார் இறந்த முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில் அந்த முதியவர் இப்பகுதியில் நீண்ட நாட்களாக சுற்றி திரிந்தவர் என்பது தெரியவந்தது.

உடல் அடக்கம்

இவரை அடையாளம் தெரிந்து கொள்ளும் வகையில் பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் போலீசார் தகவல் தெரிவித்தனர். ஆனால் இவரை தேடி உறவினர்கள் யாரும் வரவில்லை. இதையடுத்து இறந்த முதியவரின் உடலை போலீசாரே அடக்கம் செய்ய முடிவு செய்தனர்.அதன்படி நேற்று பிரேத பரிசோதனைக்கு பிறகு பேரூராட்சி பணியாளர்கள் உதவியுடன் அந்த முதியவரின் உடலுக்கு அய்யம்பேட்டை மதகடி பஜார் அருகே உள்ள இடுகாட்டில் மாலை மரியாதை செய்து போலீசார் உடலை அடக்கம் செய்தனர். இந்த மண்ணில் பிறந்த யாரும் அனாதை இல்லை என்பதை உணர்த்திய இச்சம்பவம் அய்யம்பேட்டை பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீசாரையும், பேரூராட்சி நிர்வாகத்தினரையும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.


Next Story