ஓமலூர் அருகே அனுமதியின்றி பார் நடத்தியவர் சிக்கினார்-105 மதுபாட்டில்கள் பறிமுதல்
ஓமலூர் அருகே அனுமதியின்றி பார் நடத்தியவர் சிக்கினார்.105 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சேலம்
ஓமலூர்:
ஓமலூரை அடுத்த காமலாபுரம் பிரிவு ரோடு பகுதியில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இதன் அருகே உரிய அனுமதியின்றி பார் நடத்தப்படுவதாகவும், அதில் மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் ஓமலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜா மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் தாராபுரம் அண்ணா நகரை சேர்ந்த திருப்பதி (வயது 45) உரிய அனுமதியின்றி பார் நடத்தியதும், மதுபாட்டில்களை விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 105 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story