தீபாவளியையொட்டி முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும்: தென்னக ரெயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்தல்


தீபாவளியையொட்டி முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும்: தென்னக ரெயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 9 Nov 2023 4:27 AM IST (Updated: 9 Nov 2023 5:11 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளியையொட்டி தென் மாவட்டங்களுக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என தென்னக ரெயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்,

தீபாவளியையொட்டி தென் மாவட்டங்களுக்கு முன் பதிவு இல்லாத சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும். அதிலும் குறிப்பாக செங்கோட்டை மார்க்கத்தில் முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும் என தென்னக ரெயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. சிறப்பு ரெயில்கள் பற்றி முறையாக அறிவிக்கப்படாததால் சாமானிய மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. எனவே இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் பற்றி தென்னக ரெயில்வே நிர்வாகம் முறையாக முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. அதிலும் பகல் நேர சேர்கார் வசதி உள்ள ரெயில்கள் இயக்கப்படுவது சாமானிய நடுத்தர மக்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் தீபாவளியையொட்டி முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில்கள் இயக்க தென்னக ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு இயக்கினால் அனைவரும் சொந்த ஊர்களுக்கு எளிதில் செல்ல வசதியாக இருக்கும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story