தஞ்சை-திருச்சி இடையே முன்பதிவில்லா ரெயில் மீண்டும் இயக்கம்
2 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை-திருச்சி இடையே முன்பதிவில்லா ரெயில் மீண்டும் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தஞ்சாவூர்
அதன்படி திருச்சி-தஞ்சை இடையே மீண்டும் முன்பதிவு செய்யப்படாத சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கும் என ரெயில்வே வாரியம் அறிவித்தது. இதையடுத்து திருச்சி-தஞ்சை இடையே முன்பதிவு செய்யப்படாத சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்(வண்டி எண்:06869) தஞ்சை ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று காலை 6.45 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு 8.15 மணிக்கு சென்றடைந்தது.
பயணிகள் மகிழ்ச்சி
இந்த ரெயில் ஆலக்குடி, பூதலூர், அயனாபுரம், சோளகம்பட்டி, தொண்டமான்பட்டி, திருவெறும்பூர், மஞ்சத்திடல், பொன்மலை ரயில் நிலையங்களில் ஒரு நிமிடம் நின்று சென்றது. 2 ஆண்டுகளுக்கு பிறகு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் மீண்டும் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்சசி அடைந்தனர்.
முன்னதாக தஞ்சை ரெயில் நிலையத்தில் தஞ்சை மாவட்ட ரெயில்வே பயணிகள் சங்க செயலாளர் வக்கீல் ஜீவக்குமார் தலைமையில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் துணைத் தலைவர் கண்ணன், வக்கீல் உமர்முக்தார், பேராசிரியர் திருமேனி, புலவர் செல்ல.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.