தடுப்பூசி போட்டதாக வந்த குறுஞ்செய்தி


தடுப்பூசி போட்டதாக வந்த குறுஞ்செய்தி
x

கொரோனா ஊசி போடாதவா்களுக்கு தடுப்பூசி போட்டதாக வந்த குறுஞ்செய்தி நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட சேகர், சத்யநாராயணன், கண்ணன், வேதநாயகி உள்பட பல பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடாமலேயே ஊசி போட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் அவர்கள் திருவெண்காடு மற்றும் சீர்காழி அரசு ஆஸ்பத்திாிகளில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி உள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு உண்டான சான்றிதழை பதிவிறக்கம் செய்து பார்த்தால் அதிலும் பூஸ்டர் டோஸ் செலுத்தியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், அவா்கள் இலவச பூஸ்டர் தடுப்பூசியை போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story