கோட்டக்கணக்கர் பதவியை மேம்படுத்தி இளநிலை ஆட்சி அலுவலர் பதவியை உருவாக்கிட வேண்டும் பொதுப்பணித்துறை ஆட்சிப்பணியாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம்


கோட்டக்கணக்கர் பதவியை மேம்படுத்தி  இளநிலை ஆட்சி அலுவலர் பதவியை உருவாக்கிட வேண்டும்  பொதுப்பணித்துறை ஆட்சிப்பணியாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 2 Oct 2022 12:15 AM IST (Updated: 2 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோட்டக்கணக்கர் பதவியை மேம்படுத்தி இளநிலை ஆட்சி அலுவலர் பதவியை உருவாக்கிட வேண்டும் என்று பொதுப்பணித்துறை ஆட்சிப்பணியாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடலூர்

தமிழ்நாடு பொதுப்பணித்துறை கணக்கு மற்றும் ஆட்சிப்பணியாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் கடலூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அருள் தலைமை தாங்கினார். பொருளாளர் தென்குமரன் முன்னிலை வகித்தார். செயலாளர் வெங்கடாஜலபதி வரவேற்றார். முன்னாள் மாநில துணைத்தலைவர் சுந்தரராஜன் தொடக்க உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் செல்வம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் கோட்டக்கணக்கர் மற்றும் கண்காணிப்பாளர் பதவிகளை இணைத்து இளநிலை ஆட்சி அலுவலர் பதவி உருவாக்கப்படும் என்ற நடைமுறையை பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை ரத்து செய்ய வேண்டும். கோட்டக்கணக்கர் பதவியை நெடுஞ்சாலைத்துறை நடைமுறையில் உள்ளது போல், மாநில சேவையாக்கப்பட வேண்டும். கோட்டக்கணக்கர் பதவியை மேம்படுத்தி கோட்டங்களுக்கு இளநிலை ஆட்சி அலுவலர் பதவியை உருவாக்கிட வேண்டும். பதவி மாற்றம் மூலம் இளநிலை வரைதொழில் அலுவலர் ஜே.டி.ஓ. பதவி உயர்வு வழங்குவது தொடர்பான அரசாணையை திருத்தம் செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட தலைவர்கள் ரவிச்சந்திரன், காசிநாதன், மாநில துணைத்தலைவர் வேலுமணி, மாவட்ட செயலாளர் பாண்டுரங்கன், பொருளாளர் அப்துல்நஜ்மொஹிதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நீர்வளத்துறை ராமச்சந்திரன் நன்றி கூறினார்.


Next Story