உப்புக்கோட்டை பகுதியில் தக்காளி விலை அதிகரிப்பு:விவசாயிகள் மகிழ்ச்சி


உப்புக்கோட்டை பகுதியில் தக்காளி விலை அதிகரிப்பு:விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 6 Jun 2023 12:15 AM IST (Updated: 6 Jun 2023 8:39 AM IST)
t-max-icont-min-icon

உப்புக்கோட்டை பகுதியில் தக்காளி விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தேனி

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான கூழையனூர், குச்சனூர், பாலார்பட்டி, குண்டல் நாயக்கன்பட்டி, உப்புக்கோட்டை உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் முட்டைகோஸ், பீட்ரூட், தக்காளி முள்ளங்கி, கத்தரிக்காய், வெங்காயம், கொத்தமல்லி என அனைத்து வகையான காய்கறிகளும் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதியில் ஆண்டுதோறும் காய்கறி சாகுபடி செய்யப்படுவதே சிறப்பம்சம் ஆகும். முல்லைப்பெரியாறு பாசனம் மூலம் விளைச்சல் அடைவதால் காய்கறிகள் மிகவும் சுவையாக இருக்கும்.

வெளி மாவட்டம் மற்றும் கர்நாடகா, கேரளா ஆகிய அன்டை மாநிலங்களில் கம்பம் பள்ளத்தாக்கு கடைமடை பகுதியில் விளையும் காய்கறிகளுக்கு நல்ல கிராக்கி உள்ளது. இந்த பகுதியில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் தக்காளி கடந்த மாதம் சாகுபடி செய்யப்பட்டது. போதிய பாசன வசதி மற்றும் நோய்தாக்குதல் இல்லாததால் தக்காளி நன்கு விளைச்சல் அடைந்து உள்ளது.

தற்போது தக்காளிகள் பறிக்கப்பட்டு விற்பனைக்காக சந்தைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. 15 கிலோ அடங்கிய ஒரு கூடை தக்காளி கடந்த மாதம் ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது விலை அதிகரித்து ஒரு கூடை தக்காளி ரூ.600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை அதிகரிப்பால் தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story