அக்னீஸ்வரர் கோவிலில் அப்பர் ஐக்கிய திருவிழா


அக்னீஸ்வரர் கோவிலில் அப்பர் ஐக்கிய திருவிழா
x
தினத்தந்தி 15 May 2023 12:15 AM IST (Updated: 15 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற அப்பர் ஐக்கிய திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற அப்பர் ஐக்கிய திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அப்பர் ஐக்கிய திருவிழா

திருமருகல் ஒன்றியம் திருப்புகலூரில் அக்னீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தான் தேவார ஆசிரியர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் ஐக்கியமானார். இதனால் இந்த கோவிலில் ஆண்டுதோறும் அப்பர் ஐக்கிய திருவிழா நடைபெற்று வருகிறது.

அதேபோல இந்த ஆண்டு அப்பர் ஐக்கிய திருவிழா 10 நாட்கள் நடைபெற்றது. விழாவையொட்டி நேற்றுமுன்தினம் காலை கட்டமது உண்பதும், உழவாரப்பணி விடை செய்வதும், 63 நாயன்மார்கள் புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

திருமுறை கருத்தரங்கம்

அதைதொடர்ந்து இரவு திருமுறை கருத்தரங்கு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் திருப்புகலூர் 18-வது குருமகா சன்னிதானம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சாமிகள் தலைமை தாங்கினார். திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் காரைக்கால் புலவர் ராஜேஸ்வரன், திருவாரூர் புலவர் விவேகானந்தன், கவிஞர் நாகை நாகராஜன், புலவர் நாகை வேம்புமாலா ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர். இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை அப்பர் ஐக்கியமாகும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் ஆதீன இளவரசு அஜபா நடேஸ்வர சாமிகள், கோவில் நிர்வாகிகள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story