3 மையங்களில் யு.பி.எஸ்.சி. தேர்வு


3 மையங்களில் யு.பி.எஸ்.சி. தேர்வு
x

வேலூர் மாவட்டத்தில் 3 மையங்களில் யு.பி.எஸ்.சி. தேர்வு நடக்கிறது.

வேலூர்

மத்திய தேர்வாணைய குழுவின் (யு.பி.எஸ்.சி.) நேஷனல் டிபென்ஸ் அகாடமி மற்றும் நேவல் அகாடமிக்கான தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த தேர்வு எழுத வேலூர் மாவட்டத்தில் 339 பேர் விண்ணப்பித்துள்ளனர். வேலூரில் கூனா பிரசிடென்சி பள்ளியில் தேர்வு நடக்கிறது. காலை 10.30 மணி முதல் 12.30 மணிவரையும், பிற்பகல் 2 மணி முதல் 4.30 மணி வரையும் தேர்வு நடக்கிறது.

இதேபோல முப்படை பிரிவில் பணியில் சேருவதற்கான தேர்வும் இன்று வேலூர் மாவட்டத்தில் 2 மையங்களில் நடக்கிறது. சாந்தி நிகேதன் பள்ளி மற்றும் வேலூர் வெங்கடேஸ்வரா பள்ளியில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் 11 மணி வரையும், 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரையும் தேர்வு நடக்கிறது. சாந்திநிகேதன் பள்ளியில் 172 பேரும், வெங்கடேஸ்வரா பள்ளியில் 121 பேரும் என மொத்தம் 293 பேர் எழுதுகின்றனர்.

தேர்வை முன்னிட்டு தேர்வு மையங்களில் வகுப்பறை சுத்தம் செய்யும் பணி நடந்தது. மேலும் அங்கு அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கிருமிநாசினி தெளிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. இந்த தேர்வினை கண்காணிப்பாளர் உமாசீனிவாசன் ஆய்வு செய்ய உள்ளார்.


Next Story