ஓசூர், கிருஷ்ணகிரியில் 9 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்துவைத்தார்
ஓசூர்
நகர்ப்புற நலவாழ்வு மையங்கள்
தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறப்பு விழா நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நகர்ப்புற நல வாழ்வு மையங்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதனிடையே ஓசூரில் 8 இடங்களிலும், கிருஷ்ணகிரியில் ஒரு இடத்திலும் ரூ.2 கோடியே 25 லட்சம் மதிப்பில் நகர்ப்புற நலவாழ்வு மைய கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதை காணொலி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதைதொடர்ந்து ஓசூர் கணபதி நகரில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் கலெக்டர் சரயு குத்து விளக்கேற்றி வைத்தார்.
எம்.பி.-எம்.எல்.ஏ.
இதில் செல்லகுமார் எம்.பி., ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, மாநகராட்சி ஆணையாளர் சினேகா, உதவி கலெக்டர் சரண்யா, துணை மேயர் ஆனந்தய்யா, சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார், மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவர் மாதேஸ்வரன் மற்றும் கவுன்சிலர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள்உள்பட பலர் கலந்துகொண்டனர்.