ரூ.25 லட்சத்தில் நகர்ப்புற சுகாதார ஆரோக்கிய மையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா


ரூ.25 லட்சத்தில் நகர்ப்புற சுகாதார ஆரோக்கிய மையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா
x

ரூ.25 லட்சத்தில் நகர்ப்புற சுகாதார ஆரோக்கிய மையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டல பகுதிக்குட்பட்ட பாளையங்கோட்டை இயற்பகை நாயனார் தெரு வடக்கு பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பில் நகர்ப்புற சுகாதார ஆரோக்கிய மையம் புதிதாக கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜை நேற்று நடந்தது. அப்துல்வகாப் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார். விழாவில் மேயர் பி.எம்.சரவணன், துணைமேயர் கே.ஆர்.ராஜூ, மண்டல தலைவர்கள் பிரான்சிஸ், ரேவதி பிரபு, உதவி ஆணையாளர் ஜஹாங்கிர் பாட்ஷா, கவுன்சிலர் ஜெகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பாளையங்கால்வாய் கரையில் உடைந்த இடங்களை பார்வையிட்ட அப்துல் வகாப் எம்.எல்.ஏ., அங்கு அமலைச்செடிகளை அகற்றவும் ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.


Next Story