யூரியா இருப்பு வைக்க நடவடிக்கை


யூரியா இருப்பு வைக்க நடவடிக்கை
x

யூரியா இருப்பு வைக்க நடவடிக்கை

திருப்பூர்

அவினாசி

அவினாசி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அருள்வடிவு கூறியதாவது:-

அவினாசி வட்டாரத்தில் உள்ள அனைத்து தனியார் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் உரங்கள் இருப்பு வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ராபி பருவத்திற்கு தேவையான உரம் அவினாசி வட்டாரத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் தாமதம் இன்றி உரிய காலத்தில் சென்றடைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து தொடக்க வேளாண்மை கடன் சங்கங்களிலும் 30 மெட்ரிக் டன் யூரியா இருப்பு உள்ளது மற்றும் டேன் பீடு நிறுவனத்தின் மூலம் தொடக்க வேளாண்மை கடன் சங்கங்களிலும் போதுமான இருப்பு உள்ளது. வட்டார அளவில் உள்ள உர விற்பனை நிலையங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உரங்களை விற்பனை எந்திரம் மூலம் மட்டுமே விற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. விதிமுறைகளை மீறும் விற்பனையாளர்கள் மீது உரக்கட்டுப்பாட்டு சட்டம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் படி (1955) நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story