பாளையங்கோட்டையில் உறியடி திருவிழா


பாளையங்கோட்டையில் உறியடி திருவிழா
x

பாளையங்கோட்டையில் உறியடி திருவிழா நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டையில் கிருஷ்ண ஜெயந்தி விழா 2 நாட்கள் கொண்டாடப்பட்டது. நேற்று பாளையங்கோட்டை தபால் அலுவலகம் தெருவில் இருந்து கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்த சிறுவர்-சிறுமிகள் ஊர்வலமாக ராமசாமி கோவில் திடலை வந்தடைந்தனர். அங்கு இரவு மனித பிரமீடு வடிவில் உறியடித்தல், வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான இளைஞர்கள், சிறுவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். முன்னதாக கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக துணை மேயர் கே.ஆர்.ராஜூ கலந்து கொண்டு சிறுவர்-சிறுமிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். இதில் பாளையங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக நேற்று முன்தினம் ரத்ததான முகாம், மரக்கன்றுகள் நடும் விழா, முதியோர், ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை பாளையங்கோட்டை யாதவர் இளைஞரணியினர் செய்திருந்தனர்.


Next Story