கூட்டுறவு தணிக்கை துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்-மாநில செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்


கூட்டுறவு தணிக்கை துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்-மாநில செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
x

கூட்டுறவு தணிக்கை துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று மாநில செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

சேலம்

தமிழ்நாடு கூட்டுறவு தணிக்கைத்துறை அலுவலர் சங்க மாநில பிரதிநிதித்துவ பேரவை கூட்டம் மற்றும் 96-வது மாநில மத்திய செயற்குழு கூட்டம் சேலம் தமிழ்ச்சங்க மண்டபத்தில் நேற்று நடந்தது. மாநில தலைவர் செல்வபாண்டியன் தலைமை தாங்கினார். தலைமை நிலைய செயலாளர் அருணாச்சலம் வரவேற்றார். கவுரவ தலைவர் செல்வம், மாநில பொதுச்செயலாளர் சண்முகசுந்தரம், பொருளாளர் துரைக்கண்ணன், சேலம் மாவட்ட தலைவர் செந்தில்குமார் உள்பட கூட்டுறவு தணிக்கைத்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் 1.4.2003-க்கு பிறகு அரசுப்பணியில் சேர்ந்த அனைத்து பணியாளர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கூட்டுறவு தணிக்கை துறையில் 50 சதவீதத்திற்கு மேலான காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மத்திய அரசு அறிவித்த அகவிலைப்படி உயர்வை மாநில அரசு வழங்க வேண்டும். கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குனர் பணியிடம் காலியாக இருந்தும், 2022-ம் ஆண்டுக்கான பதவி உயர்வு பட்டியல் அங்கீகரிக்கப்பட எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியும், பதவி உயர்வு பட்டியல் அங்கீகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story