1,928 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்


1,928 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
x

தர்மபுரி மாவட்டம் முழுவதும் 1,928 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

தர்மபுரி

தர்மபுரி மாவட்டம் முழுவதும் 1,928 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

கொரோனா தடுப்பூசி முகாம்

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் நேற்று 1,928 இடங்களில் 37-வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. மேலும் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் ஆகியவற்றிலும் முகாம் நடைபெற்றன. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

இந்த நிலையில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், வட்டார மருத்துவ அலுவலர்கள் சிறப்பு முகாம்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். முகாமுக்கு தேவையான மருந்துகள் தயார் நிலையில் உள்ளதா? என கேட்டறிந்தனர். தொடர்ந்து தடுப்பூசி செலுத்தாத பொதுமக்களுக்கு அவர்களது வீடுகளுக்கே நேரில் சென்று தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

வீடு தேடி சென்று...

இதையடுத்து செவிலியர்கள் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாத பொதுமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று தடுப்பூசி செலுத்தினர். இதேபோன்று மாவட்ட முழுவதும் பல்வேறு இடங்களில் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களை கண்டுபிடித்து அவர்களது வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டது. தர்மபுரி மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 1,928 இடங்களில் நடைபெற்ற முகாம்களில் மொத்தம் 10,039 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.


Next Story