கிடாரி கன்றுகளுக்கு கருச்சிதைவு நோய் தடுப்பூசி முகாம்


கிடாரி கன்றுகளுக்கு கருச்சிதைவு நோய் தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 4 Feb 2023 12:15 AM IST (Updated: 4 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிடாரி கன்றுகளுக்கு கருச்சிதைவு நோய் தடுப்பூசி முகாமை கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிடாரி கன்றுகளுக்கு கருச்சிதைவு நோய் தடுப்பூசி முகாமை கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.

தடுப்பூசி முகாம்

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கருச்சிதைவு நோய் தடுப்பூசி முகாம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று தொடங்கியது. பர்கூர் ஒன்றியம் மருதேப்பள்ளி கிராமத்தில் நடந்த முகாமை கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.

இதில் உதவி இயக்குனர் டாக்டர் அருள்ராஜ், கால்நடை உதவி டாக்டர்கள் சிவசங்கர், சரவணகுமார், கால்நடை ஆய்வாளர் சின்னசாமி, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மற்றும் கால்நடை விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில், 100-க்கும் மேற்பட்ட கன்றுகளுக்கு கருச்சிதைவு ஊசி போடப்பட்டது.

இது குறித்து இணை இயக்குனர் கூறியதாவது:-

25 நாட்கள் நடக்கிறது

இந்த கருச்சிதைவு தடுப்பூசி முகாம் வருகிற 28-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 2023-ம் ஆண்டிற்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4 முதல் 8 மாதமுள்ள கிடாரி கன்றுகளுக்கு கருச்சிதைவு நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது. மாவட்டத்தில் 20 ஆயிரம் கிடாரி கன்றுகளுக்கு முதல் தவணையாக தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

ஒவ்வொரு கிராமத்திலும் அந்தந்த பகுதி கால்நடை உதவி டாக்டர் தலைமையிலான குழு முகாமிட்டு 4 முதல் 8 மாதமுள்ள கிடாரி கன்றுகளுக்கு தடுப்பூசி போடப்படும். குறிப்பிட்ட நாளில் மருத்துவ குழுவினரால் கிராமங்களில் உள்ள அனைத்து கன்றுகளுக்கும் தடுப்பூசி போடப்படும். எனவே, மாவட்டத்தில் உள்ள கால்நடை விவசாயிகள் தங்களது கிடாரி கன்றுகளை அழைத்து சென்று தடுப்பூசியை செலுத்தி பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story