குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம்
குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம்
திருவாரூர்
நீடாமங்கலம் வட்டம் கோவில்வெண்ணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பழைய நீடாமங்கலம் துணை சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமை வட்டார மருத்துவ அலுவலர் ராணி முத்துலட்சுமி ெதாடங்கி வைத்தார். முகாமில் 5 வயதிற்கு கீழ் உள்ள விடுபட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்த தடுப்பூசி பணியை கிராம சுகாதார செவிலியர் மரியம்மாள் மேற்கொண்டார். இந்த முகாம் நேற்று தொடங்கி வருகிற 12-ந்தேதி வரை நடக்கிறது. எனவே முகாமை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மருத்துவ அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.
Related Tags :
Next Story