வடபாதிமங்கலத்தில், ஆடுகளுக்கு தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும்


வடபாதிமங்கலத்தில், ஆடுகளுக்கு தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும்
x

வெக்கை நோைய கட்டுப்படுத்த வடபாதிமங்கலத்தில் தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

வெக்கை நோைய கட்டுப்படுத்த வடபாதிமங்கலத்தில் தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெக்கை நோய்

கூத்தாநல்லூர் அருகே வடபாதிமங்கலம் பகுதியில் உள்ள கிராமப்புற மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்ளும் வகையில், தங்கள் வீடுகளில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். தற்போது பருவநிலை மாற்றம் காரணமாக ஆடுகளுக்கு வெக்கை நோய் பரவி வருகிறது.இந்த நோயால் ஆடுகளின் உடலில் அளவுக்கு அதிகமாக சூடு ஏறுவதுடன், ஆடுகளுக்கு அதிகளவில் வெக்கை ஏற்பட்டு, சளி, இருமல், காய்ச்சல் ஏற்படுகிறது. இதனால் ஆடுகளுக்கு மூச்சு திணறல் மற்றும் தலைப்பகுதியில் சளி உறைந்து நோய் ஏற்படுகிறது.

தடுப்பூசி முகாம்

வெக்கை நோய் என்ற இந்த நோய் ஒரு ஆட்டுக்கு பரவியதும் அது தொடர்ச்சியாக அடுத்தடுத்த ஆடுகளுக்கும் பரவும் தன்மை கொண்டது. இதனால், ஆடுகள் அதிக அளவில் சளி இருமலுடன் மூச்சு திணறி வருகிறது. வடபாதிமங்கலத்தில் கால்நடை ஆஸ்பத்திரி இல்லாததால் ஒரு சில ஆடுகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க முடியாமல் இறந்து விட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர் .தற்போது வெக்கை நோய் அதிகரிக்கும் வகையில் உள்ளதால், ஆடுகள் இறப்பை தடுக்கும் வகையில் வடபாதிமங்கலம் பகுதிகளில் ஒரு சில வாரங்களுக்கு தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story