மாடுகளுக்கு பெரியம்மை தடுப்பூசி செலுத்த வேண்டும்- கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தல்


மாடுகளுக்கு பெரியம்மை தடுப்பூசி செலுத்த வேண்டும்- கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 12 Nov 2022 12:15 AM IST (Updated: 12 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட உள்ளது. இந்த பணிக்காக 3 லட்சம் தடுப்பூசி மருந்துகள் பெறப்பட்டு, கால்நடை பராமரிப்பு துறை மூலம் செலுத்தப்பட உள்ளது. எனவே விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் அந்தந்த பகுதி கால்நடை மருந்தக உதவி மருத்துவரை தொடர்பு கொண்டு, தங்களின் கால்நடைகளுக்கு தவறாமல் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story