வடக்குவாசெல்லியம்மன் கோவில் வருசாபிஷேகம்
வடக்குவாசெல்லியம்மன் கோவிலில் வருசாபிஷேகம் நடைபெற்றது.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே உள்ள கே.சுந்தரேஸ்வரபுரம் வடக்குவா செல்லியம்மன் கோவில் புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டு, வருசாபிஷேகம் நடந்தது. இதையொட்டி நாடி சந்தனம், ரக்ஷாபந்தனம், மகா பூர்ணாகுதி, வேதிகா அர்ச்சனை, யாத்ரா தானம், யாக சாலை பிரவேஷம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் செய்து ஹோமங்கள் வளர்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட புனித நீரால் கும்ப அபிஷேகம் செய்யப்பட்டு கோவில் வருசாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் வடக்குவா செல்லியம்மன் மற்றும் கருப்பசாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு பால், இளநீர், மஞ்சள், குங்குமம், திருநீறு, தயிர் உள்ளிட்ட 21 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கார தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து விளாத்திகுளம் யூனியன் தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.