வடமாடு மஞ்சுவிரட்டு


வடமாடு மஞ்சுவிரட்டு
x

வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை அருகே குளத்தூர் நாயக்கர்பட்டியில் முனியாண்டவர் பிடாரி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. தொடர்ந்து மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 10-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. 100-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டதில் 10 சுற்றுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு சுற்றிலும் 9 வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். சில காளைகளை வீரர்கள் அடக்கினர். சில காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் போக்கு காட்டியது. காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்கள் கொண்ட குழுவுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பிடிபடாத காளைகளின் உரிமையாளருக்கு ரொக்க பரிசு மற்றும் பல்வேறு பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது. இந்த வடமாடு மஞ்சுவிரட்டை திரளான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை குளத்தூர் நாயக்கர்பட்டி நாட்டார்கள் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.


Next Story