வடுவூர் கோதண்டராமர் கோவில் தேரோட்டம்


வடுவூர் கோதண்டராமர் கோவில் தேரோட்டம்
x

வடுவூர் கோதண்டராமர் கோவிலில் ராமநவமி விழா நிறைவாக இன்று (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.

திருவாரூர்

வடுவூர்:

வடுவூர் கோதண்டராமர் கோவிலில் ராமநவமி விழா நிறைவாக இன்று (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.

கோதண்டராமர் கோவில்

திருவாரூர் மாவட்டம் வடுவூரில் வரலாற்று சிறப்புமிக்க கோதண்டராமர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கோதண்டராமர் வில்லேந்திய திருக்கோலத்தில் சீதாதேவி, லட்சுமணன், அனுமன் சமேதரராக அருள்பாலிக்கிறார்.

மேலும் ஹயக்கிரீவர் சாமி சன்னதியும் தனியாக உள்ளது. வருடம் முழுவதும் இங்கு பக்தர்கள் அதிக அளவில் தரிசனத்திற்காக வருகின்றனர். இக்கோவிலில் ராமநவமியையொட்டி பிரம்மோற்சவம் கடந்த 9-ந்தேதி கொடியேற்றதுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

வெண்ணைத்தாழி உற்சவம்

இதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் சாமி வீதிஉலா நடந்தது. இதன் ஒரு பகுதியாக நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) காலை வெண்ணைத்தாழி உற்சவம் நடந்தது. இதில் கோதண்டராமர் வெள்ளி வெண்ணை குடத்தை ஏந்தி தவழும் கண்ணனாகவும், இரவு குதிரை வாகனத்திலும் வீதியுலா நடந்தது.

இதில் ராஜ அலங்காரத்தில் வீதியுலா வந்த ராமரை பக்தர்கள் வழிபட்டனர். பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

தேரோட்டம்

காலை கோதண்டராமர் கோவிலில் இருந்து லட்சுமணன், சீதாதேவி, அனுமன் சாமிகள் சமேதரராக தேரில் எழுந்தருளி தேரோட்டம் நடக்கிறது.

நாளை (சனிக்கிழமை) சப்தாவர்ணம் எனப்படும் மலர் அபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது. அதனைத்தொடர்ந்து விடையாற்றி விழா நடைபெறும்.


Next Story