திருமோகூர் காளமேகப்பெருமாள் கோவிலில் வைகாசி பெருந்திருவிழா


திருமோகூர் காளமேகப்பெருமாள் கோவிலில் வைகாசி பெருந்திருவிழா
x

திருமோகூர் காளமேகப்பெருமாள் கோவிலில் வைகாசி பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12-ந்தேதி தேேராட்டம் நடக்கிறது.

மதுரை

புதூர்,

திருமோகூர் காளமேகப்பெருமாள் கோவிலில் வைகாசி பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12-ந்தேதி தேேராட்டம் நடக்கிறது.

திருமோகூர் காளமேகப்பெருமாள் கோவில்

ஆழ்வார்களால் பாட பெற்ற பெருமாள் கோவில்கள் திவ்ய தேசம் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது. அதன்படி 108 திவ்யதேசங்கள் உள்ளன. அதில் பாண்டிய நாட்டு திவ்ய தேசங்களில் 18-வது தலமாக திகழும் மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவில், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வாரால் பாடல் பெற்ற திருத்தலமாகும்.

மேலும் இந்த கோவிலில் சக்கரத்தாழ்வார் தனி சன்னதியில் 16 திருக்கரங்களுடன் பதினாறு திவ்ய ஆயுதங்களுடன், திருசக்கரத்தில் நரசிம்மரும் அருள்பாலிப்பது இத்தலத்திற்கு தனி சிறப்பு. இந்த கோவில் பெருந்திருவிழா ஆண்டு தோறும் வைகாசி மாதம் நடைபெறும்.

ெகாடியேற்றத்துடன் தொடக்கம்

கொரோனா நோய் தொற்றால் 2 வருடங்களுக்குப் பிறகு இந்த ஆண்டு நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 11.05 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இதையடுத்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மிகப்பிரமாண்டமான மாலை கொடிமரத்திற்கு அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

முன்னதாக கோவிலின் உற்சவ மூர்த்தியான வழித்துணை பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. மேலும் நேற்று சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தேரோட்டம்

விழாவின் தொடர்ச்சியாக தினமும் காலை 8 மணிக்கு, இரவு 7 மணிக்கு பெருமாள் அன்ன வாகனம், கருடவாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 3 மணிக்கு நடைபெறும்.

முன்னதாக காலை 9 மணியிலிருந்து 10 மணிக்குள் திருதேருக்கு பெருமாள் எழுந்தருளுவார். இதையடுத்து 13-ந்தேதி திருமஞ்சனம் நடைபெறும்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் விஜயன், செயல் அலுவலர் வெண்மணி, கோவில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Related Tags :
Next Story