"திமுக ஆட்சி மலை... பாஜக ஆட்சி மடு..." - வைகோ கருத்து


திமுக ஆட்சி மலை... பாஜக ஆட்சி மடு... - வைகோ கருத்து
x

திமுக ஆட்சியை மலை என்று கூறினால், பாஜகவின் ஆட்சியை மடு என்று தான் கூற வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

திருச்சி,

திருச்சி விமான நிலையத்தில் இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெறுவதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் எதிர்கட்சி இருப்பதாகவே தெரியவில்லை என்று குறிப்பிட்ட அவர், திராவிட கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் எந்த சமரசமும் இன்றி திமுக உறுதியுடன் இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் திமுகவின் ஓராண்டு கால ஆட்சியை மலை என்று கூறினால், பாஜகவின் 8 ஆண்டு கால ஆட்சியை மடு என்று தான் கூற வேண்டும் என வைகோ தெரிவித்தார்.


Next Story