நெல்லை தியேட்டரில் வைகோ ஆவணப்படம் வெளியீடு
நெல்லை தியேட்டரில் வைகோ ஆவணப்படம் நாளை வெளியிடப்படுகிறது.
திருநெல்வேலி
ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ எம்.பி.யின் வரலாற்று ஆவண திரைப்படமான ''மாமனிதன் வைகோ'' நெல்லை உடையார்பட்டி முத்துராம் தியேட்டரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிது. இதில் சபாநாயகர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார். முடிவில் தலைமைக்கழக செயலாளர் துரை வைகோ ஏற்புரை வழங்குகிறார். இதில் ம.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் பங்கேற்று ஆவண திரைப்படத்தை பார்க்கலாம். அவர்களுக்கு ஜூஸ், உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்று நெல்லை மாநகர மாவட்ட ம.தி.மு.க செயலாளர் கே.எம்.ஏ. நிஜாம் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story