மதிமுக பொதுச்செயலாளராக மீண்டும் தேர்வாகிறார் வைகோ..!
மதிமுக பொதுச்செயலாளராக வைகோ மீண்டும் தேர்வாகிறார்.
சென்னை,
ம.தி.மு.க. உட்கட்சி தேர்தல் வரும் ஜூன் 14-ந்தேதி முதல் நடைபெற உள்ளது. கட்சியின் தலைவர், பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதில் ம.தி.மு.க.வைச் சேர்ந்த பலர் போட்டியிடுகின்றனர். வேட்புமனுவை திரும்ப பெற ஜூன் 1-ந்தேதி (இன்று) கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மதிமுக பொதுச்செயலாளராக வைகோ மீண்டும் போட்டியின்றி தேர்வாகிறார். ஜூன் 3-ல் அறிவிப்பு வெளியாகிறது. மதிமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிந்த நிலையில் வைகோ போட்டியின்றி தேர்வாகிறார். தேர்தலில் பொதுச்செயலாளர் பதவிக்கு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என கூறப்படுகிறது.
மல்லை சத்யா உள்ளிட்ட 5 பேர் மதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படவுள்ளனர். மதிமுக அவைத் தலைவராக திருப்பூர் துரைச்சாமிக்கு பதிலாக அர்ஜூன் ராஜ் போட்டியின்றி தேர்வாகிறார். துரை வைகோ முதன்மை செயலாளராகவும், பொருளாளராக செந்திலதிபனும் போட்டியின்றி தேர்வாகின்றனர்.