உருவ படத்துக்கு வைகோ மரியாதை


உருவ படத்துக்கு வைகோ  மரியாதை
x
தினத்தந்தி 14 July 2023 1:30 AM IST (Updated: 14 July 2023 1:31 AM IST)
t-max-icont-min-icon

ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் செல்வராகவன் வீட்டுக்கு சென்ற வைகோ, அவருடைய தந்தையின் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் வாழைக்காய்பட்டி பிரிவு சமாதான நகரை சேர்ந்தவர் செல்வராகவன். இவர் ம.தி.மு.க. மாவட்ட செயலாளராகவும், உயர்நிலைக்குழு உறுப்பினராகவும் உள்ளார். அவருடைய தந்தை நாராயணசாமி, கடந்த 5-ந்தேதி உடல்நலக்குறைவால் இறந்தார். இதையொட்டி அரசியல் கட்சியினர், அவருடைய வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறி வந்தனர்.

இந்தநிலையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, நேற்று மாலையில் மதுரையில் இருந்து திண்டுக்கல்லுக்கு காரில் வந்தார். இதைத்தொடர்ந்து மாவட்ட செயலாளர் செல்வராகவன் வீட்டுக்கு சென்ற வைகோ, அவருடைய தந்தையின் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் அவர், செல்வராகவனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் செல்வேந்திரன், மதுரை எம்.எல்.ஏ. பூமிநாதன், தீர்மானக்குழு உறுப்பினர் ராமசாமி, திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் மோகன், மாநகராட்சி 48-வது வார்டு கவுன்சிலர் காயத்ரி, மாவட்ட அவைத்தலைவர் சுதர்சன், தலைமை செயற்குழு உறுப்பினர் சேகர், மாநில விவசாய அணி துணை செயலாளர் தியாகராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story