அக்னிபத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - வைரமுத்து வலியுறுத்தல்


அக்னிபத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்  - வைரமுத்து வலியுறுத்தல்
x

'அக்னிபத்' திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

சென்னை அண்ணாநகரில் தனியார் ஐஏஎஸ் அகாடமியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோர் திறந்து வைத்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கவிஞர் வைரமுத்து, கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்து ஐ.ஏ.எஸ் பதவிகளுக்கு தேர்ச்சி ஆகும் சதவீதம் குறைந்துள்ளதை கவலையோடு சிந்திக்க வேண்டும் என்று கூறினார்.

இந்திய ஆட்சிப் பணி என்பது வட இந்திய ஆட்சிப் பணி என்று மாறிவிட்டால் இந்தியாவின் ஒருமைப்பாடு இருக்காது என்றும் வடநாட்டு ஆதிக்கம், இந்தி ஆதிக்கம் மேலோங்கி இருப்பதால் தமிழ் மாணவர்கள் வஞ்சிக்கப்படுகிறார்களோ? என்ற ஐயம் எழும்புகிறது என்றும் கூறினார்.

மேலும் மத்திய அரசு, அக்னிபத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அரசியல் கடந்து, மதம் கடந்து இளைஞர்கள் கொதிக்கிறார்கள், இளைஞர்கள் எதிர்க்கிறார்கள் என்றால் அதன் தார்ப்பரியம் என்ன என்பதை நிகழ்கால ஒன்றிய அரசு சிந்திக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார்.


Next Story